கொக்பொரோக் நாள்

கொக்பொரோக் நாள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பத்தொன்பதாம் நாளன்று திரிபுரா மாநிலத்தில் நினைவுகூரப்படுகிறது. கொக்பொரோக் மொழியை பேசும் மக்களின் கோரிக்கையை ஏற்று, 1979ஆம் ஆண்டில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்த ஆணையை அப்போதைய திரிபுராவின் முதல்வரான நிரூபன் சக்கரவர்த்தி ஆணை பிறப்பித்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கொக்பொரோக் நாள் கொண்டாடப்படுகிறது.இந்த மொழி, திரிபுராவின் பழங்குடியினர் தன்னாட்சிப் பிரதேசத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.