திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் | Thiruvalluvar Other Names in Tamil

திருவள்ளுவர் பற்றிய சிறப்புகளை சொன்னோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குறள், இரண்டு குறள் இல்லை மொத்தம் 1330 குறட்பாக்களை வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்களோடு உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இந்த பதிவில் திருவள்ளுவரை பற்றி தெரிந்துகொள்ளுவோம். திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார். உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை முறையில் சரியான வழியில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தனது 133 அதிகாரங்கள் மூலம் பல வருடங்களுக்கு முன்பே தெளிவாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். இன்னும் திருவள்ளுவரை பற்றி பல விஷங்களை கீழே படித்தறிவோம்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சிறப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ள திருக்குறள் சிறப்புகள்

திருவள்ளுவர் பற்றிய குறிப்பு:

திருக்குறளை எழுதியவர் யார் திருவள்ளுவர்
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது கி .பி. 2-ம் நூற்றாண்டு (சரியான ஆதாரம் இல்லை)
திருவள்ளுவர் பிறந்த ஊர் எது மயிலாப்பூர் (சரியான ஆதாரம் இல்லை)
திருவள்ளுவர் மனைவி பெயர் என்ன வாசுகி
திருவள்ளுவர் பெற்றோர் பெயர் in tamil ஆதி – பகவன் (சரியான ஆதாரம் இல்லை)
வசித்த இடம் மயிலாப்பூர்

Thiruvalluvar Other Names in Tamil:

திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரை பல சிறப்பு பெயர்களால் அலைத்து வந்திருக்கின்றனர். அந்த பெயர்களை பார்ப்போம்:

  1. தேவர்
  2. நாயனார்
  3. தெய்வப்புலவர்
  4. செந்நாப்போதர்
  5. பெருநாவலர்
  6. பொய்யில் புலவர்
  7. பொய்யாமொழிப் புலவர்
  8. மாதானுபங்கி
  9. முதற்பாவலர்

திருக்குறள் வழிவந்த நூல்கள்:

 about thiruvalluvar in tamil

திருவள்ளுவர் வழிவந்த இரண்டு நூல்கள் ஞான வெட்டியான், பஞ்சரத்னம். இவருடைய வழியில் வந்ததால் இவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்து வந்தனர்.

திருவள்ளுவரும், சைவமும்:

 thiruvalluvar other names in tamil

திருவள்ளுவ நாயனார் என சைவர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் என்றும், இவர் இயற்றிய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.

திருக்குறள் அதன் அர்த்தம்

வள்ளுவரின் திருக்கோயில்:

வள்ளுவரின் திருக்கோயில்

திருவள்ளுவர் பிறந்த இடமான மயிலாப்பூரில் வள்ளுவருக்கான கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

திருவள்ளுவர் நினைவுச் சின்னம்:

 திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்
வள்ளுவர் கோட்டம் – சென்னையில் உள்ள ஒரு முக்கியமான பகுதி “வள்ளுவர் கோட்டம்”. இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் திருக்குறளின் அனைத்து குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன . இன்று வரை தமிழக அரசு அதனை சிறப்பாக பாதுகாத்து வருகிறது.

வள்ளுவரின் சிலை
வள்ளுவரின் சிலை – தமிழக மற்றும் இந்திய தேசத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திரு உருவ சிலை நிருவப்பட்டுள்ளது. அவரது 133 அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133 அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையினை செய்த சிற்பியின் பெயர் கணபதி ஸ்தபதி.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம்:

திருவள்ளுவர் வாழ்ந்த காலம்

திருவள்ளுவரின் காலம், குறைந்தது கி.மு. 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இருக்க வேண்டும்.

திருக்குறள் பற்றிய வினா விடை

திருவள்ளுவர் இறப்பு:

திருவள்ளுவர் இறப்பு

தமிழ் புலவரான திருவள்ளுவர் இறப்பு குறித்து இன்று வரை அதிகாரபூர்வமான தகவல் கிடைக்கவில்லை.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Author: admin