கம்பராமாயணம் வினா விடை | Kamba Ramayanam in Tamil

Kamba Ramayanam in Tamil:- ராமனது வரலாற்றை கூறும் நூல் கம்பராமாயணம் நூல் ஆகும். கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். சரி இந்த பதிவில் கம்பராமாயணம் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பதிவு போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட குறிப்புகளை படித்து பயன் பெறுங்கள்.

கம்பராமாயணம் பற்றிய பொது அறிவு வினா விடை | Ramayana Questions and Answers in Tamil

1 கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் என்ன?

விடை: இராமாவதாரம்.

2 வடமொழியில் வால்மீகி எழுதிய முதல் நூல் எது?

விடை: இராமாயணம்

3 கம்பராமாணயம் ஒரு —–

விடை: வழி நூல்

4 கம்பராமாயணம் எத்தனை கண்டங்களை கொண்டது?

விடை: 6

5 கம்பராமாயணத்தை இயற்றியவர் யார?

விடை: கம்பர்

6 இராமாயண மாந்தரின் வடசொற் பெயர்களை எதன் நெறிப்படி தமிழ்படுத்தினார் கம்பர்?

விடை: தொல்காப்பியம்

7 ‘மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்’ என்ற செய்யுளில் பூகம் என்பதன் பொருள்?

விடை: பாக்குமரம்

8 சடையப்ப வள்ளல் யார்?

விடை: கம்பரை ஆதரித்தவர்

9 கம்பர் பிறந்த ஊர் எது?

விடை: தேரழுந்தூர்

10 அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் யார்?

விடை: குகன்

11 ‘ஆய கலையின் ஆயிரம் அம்பிக்கு’ இதில் அம்பி யார்?

விடை: படகு

12 ‘தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்’ இதில் நயனம் என்பதன் பொருள்?

விடை: கண்கள்

13 ‘இந்துவின் நுதலோளோடு’ யார்?

விடை: சீதை

14 கம்பரை ஆதரித்தவர் யார்?

விடை: சடையப்ப வள்ளல்

15 கம்பர் இறந்த ஊர் எது?

விடை: பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை

16. கம்பர் பிறந்த ஊர் எது?

விடை: சோழநாட்டுத் திருவெழுந்தூர்

17 தமிழின் மிகப் பெரிய நூல் எது?

விடை: கம்பராமாணயம்

18 கூனியின் இயற்பெயர் என்ன?

விடை: மந்தரை

19. கைகேயியின் மனத்தை மாற்றியவள் யார்?

விடை: கூனி

20 இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் எது?

விடை: மிதிலை

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

உலகிலேயே மிகப்பெரிய காப்பியம் எது?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Author: admin