ஈஷாவில் நவராத்திரி விழா அக்டோபர் 7-ல் தொடக்கம்

ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.

இதனையொட்டி, அக்டோபர் 8,9,10,12,15 ஆகிய தேதிகளில் சமஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூடியூப் சேனலில் மாலை 4.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதில், கர்நாடக இசை, வயலின் போன்றவை நடைபெறும். கொரோனா தொற்று சூழலை முன்னிட்டு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி திங்கள் முதல் வியாழன் வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மட்டுமே ஈஷாவிற்கு பக்தர்கள் நேரில் வருகைத்தர முடியும். வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Author: sivapriya