சிறிய நிதி வங்கிக்கான உரிமத்தை சென்ட்ரம், பாரத்பேவிற்கு வழங்கியது ரிசர்வ் வங்கி


பாரத் பே மற்றும் சென்ட்ரம் கூட்டமைப்பிற்கு சிறிய நிதி வங்கி (Small Finance Bank) அமைப்பதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. “சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு வங்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து உரிமம் வழங்கிய ரிசர்வ் வங்கிக்கு நன்றி” என சென்ட்ரம் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்த வங்கி யுனைட்டி வங்கி என்ற பெயரில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து வங்கி அமைக்கின்றனர். இந்தியாவின் முதல் டிஜிட்டல் வங்கியாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பே மற்றும் சென்ட்ரம் நிறுவன தலைவர்கள் தங்களுக்கு உரிமம் வழங்கிய ரிசர்வ் வங்கிக்கு நன்றி சொல்லி உள்ளனர்.

Author: admin