வெப்பச்சலனம்: நேற்று மாலை முதல் சென்னையில் விட்டு விட்டு பெய்த மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

கோயம்பேடு, கிண்டி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, அண்ணா நகர், மாம்பலம், புரசைவாக்கம் உள்ளிட்ட தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. சென்னையை ஒட்டியுள்ள வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போன்ற இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.

image

தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து அதிக எண்ணிக்கையில் வெளியூர் புறப்பட்ட பேருந்துகளும், இதர வாகனங்களும் மழை காரணமாக தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற இடங்களில் தேங்கி நின்றன.

Author: admin