தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவண்ணமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தென்காசி, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, ராணிப்பேட்டை, வேலூரில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், வங்கக் கடல் பகுதிகளுக்கு நாளை முதல் 18-ந் தேதிவரை செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 
Author: admin