ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நான்கு நாட்களுக்குப் பின் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர் மழையால், மலை ரயில் பாதையில் இரு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான ரயில் சேவை, நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், மண்சரிவுகளை அகற்றி, இருப்பு பாதைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து, காலை முதல் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் ரயிலில் பயணித்தனர்.

Author: admin