ஃபேஸ்புக்-ன் ஆபத்தான தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வெளியே கசியவிட்ட அமெரிக்க செய்தி நிறுவனம்

ஃபேஸ்புக் நிறுவனத்தால், ‘ஆபத்தான தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகள்’ என வகைப்படுத்தப்பட்ட 10 இந்திய அமைப்புகள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியே கசிந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த The Intercept என்னும் செய்தி நிறுவனம் கசியவிட்டுள்ள இந்த பட்டியலில், Sanatan Sanstha, All Tripura Tiger Force, Khalistan Tiger Force, Indian Mujahideen, உள்ளிட்ட இந்திய அமைப்புகளும், ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான், மற்றும் அமெரிக்காவின் பல வெள்ளை இன வகுப்புவாத குழுக்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
வெளியே கசிந்த இந்த பட்டியலுக்கு மறுப்பு தெரிவிக்காத ஃபேஸ்புக், ஆபத்தானவர்களை தடை செய்வதுடன் அவர்களுக்கு ஆதரவாக போடப்படும் பதிவுகள் உடனுக்குடன் நீக்கப்படுவதாக கூறியுள்ளது.
Author: admin