சாமியாடிக் கொண்டிருந்த நபர் மீது திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்திய பெண்..!

தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டி கிராமத்தில், கோயில் கொடை விழாவில் சாமி ஆடிக் கொண்டிருந்த நபர் மீது பெண் ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் அப்பகுதியில் வைரலாகி வருகிறது.
ஆண்டுதோறும் அங்கு நடக்கும் சுடலைமாடசுவாமி கோயில் திருவிழாவில் வழக்கமாக பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் தான் சாமியாடி வந்துள்ளனர். இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினார். இதனை பார்த்த அந்த பிரமிளா திடீரென சாமி வந்தது போல் ஆடி இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கினார். பின்னரும், அந்த பக்கம் சென்று கொம்பை வாங்கி வந்தும் தாக்கினார்.
இதனையடுத்து, பிரமிளாவின் சகோதரர், உறவினர்களும் சாமியாடிக் கொண்டிருந்த இசக்கிராஜாவை தாக்கிய நிலையில், காயமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Author: admin