தாலிபான்களின் எல்லைமீறிய தலையீடு, மிரட்டல்- காபுலுக்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக PIA அறிவிப்பு

தாலிபான்களின் எல்லைமீறிய தலையீடு மற்றும் மிரட்டலால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு விமானம் இயக்குவதை நிறுத்துவதாக பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சியமைப்பதற்கு முன் இருந்ததை போல விமான டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தாலிபான்கள் வற்புறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காபுலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு செல்ல இப்போது 2 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படும் நிலையில், முன்பிருந்ததை போல 120 முதல் 150 டாலர் மட்டுமே வசூலிக்க வேண்டுமென தாலிபான் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது ஆப்கானில் விமானம் இயக்கும் ஒரே நிறுவனம் அந்நாட்டின் காம் ஏர் நிறுவனம் மட்டுமே.
Author: admin